பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை தர முடியாது: முதல்வர் ஸ்டாலின் கோபம்

By KU BUREAU

சென்னை: பெரியார் தான் தலைவர்களுக்கு எல்லாம் தலைவர். பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு நான் மரியாதை தர தயாராக இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடசென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ”தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அங்கொன்றும், இங்கொன்றுமாய் நடக்கும் சில சம்பவங்களை பெரிதுபடுத்துகின்றனர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான் வெளி நாடுகளில் இருந்து முதலீடுகள் வருகின்றன. தமிழக ஆளுநர் ஒவ்வொரு விவகாரத்திலும் அரசுக்கு எதிராக தான் செயல்பட்டு வருகிறார்.

ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்பு சேர்ப்பதால் அவர் அப்படியே செயல்பட வேண்டும். பெரியார் தான் எங்களின் தலைவர், தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் அவர்தான். மற்றவர்கள் பேசுவதை நான் பொருட்படுத்த விரும்பவில்லை. பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை தர தயாராக இல்லை” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE