யுஜிசி அறிக்கையை வாபஸ் பெறும்வரை போராட்டம் தொடரும் - அமைச்சர் கோவி.செழியன் உறுதி

By KU BUREAU

நாகப்​பட்​டினம்: பல்கலைக்கழக மானியக் குழு​வின் (யுஜிசி) புதிய வரைவு நெறிமுறை​களுக்கு எதிராக கல்லூரிமாணவ, மாணவிகள், மின்னஞ்​சல்களை அனுப்பி வருகின்​றனர். அதன் ஒரு பகுதி​யாக, நாகை மாவட்டம் திரு​மருகல் பகுதி​யில் உள்ள கணினி மையத்​தில் தமிழக உயர் கல்​வித் துறை அமைச்சர் கோவி.செழியன் முன்னிலை​யில் கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று மின்னஞ்சல் அனுப்பினர்.

பின்னர் செய்தி​யாளர்​களிடம் அமைச்சர் கோவி.செழியன் கூறும்​போது, “பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய வரைவு நெறிமுறை​களைத் ​திரும்​பப்பெறும் வரை மின்னஞ்சல்களை அனுப்பும் ​போராட்​டம் தொடரும்” என்​றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE