திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க பிப். 2-ல் கையெழுத்து இயக்கம்

By KU BUREAU

மதுரை: ​திருப்​பரங்​குன்றம் மலையைப் பாது​காக்க வலியுறுத்தி பிப்​.2-ம் தேதி பொது​மக்​களிடம் கையெழுத்து இயக்கம் நடத்​தப்​படும் என்று மலை பாது​காப்பு இயக்கம் அறிவித்​துள்ளது.

இது தொடர்பாக திருப்​பரங்​குன்றம் மலை பாது​காப்பு இயக்கம் சார்​பில் வெளி​யிடப்​பட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: முரு​க​னின் அறுபடை வீடு​களில் முதல்படை வீடு திருப்​பரங்​குன்​றம். முருகப் பெரு​மான் அருள்​பாலிக்​கும் சைவ மலையின் புனிதத்​தைப் பாது​காக்க வேண்​டும். முருகப் பெரு​மானை அவமதிக்​கும் வகையிலும், இந்து சமூக மக்கள் மனதைப் புண்​படுத்​தும் வகையிலும், வேண்டு​மென்றே திட்​ட​மிட்டு திருப்​பரங்​குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிடு​வதற்​கும், மலைக்கு அசைவ உணவு கொண்​டு​செல்​லும் முயற்​சி​யிலும் சிலர் ஈடுபட்​டுள்​ளனர்.

அரசிடம் ஒப்படைக்கப்படும்... இதற்​குத் தடை விதிக்​க​வும், திருப்​பரங்​குன்றம் மலையை அபகரித்து, கந்தர் மலையை சிக்​கந்தர் மலையாக மாற்ற முயற்​சிப்​ப​தைத் தடுக்கக் கோரி​யும், திருப்​பரங்​குன்றம் மலையின் புனிதத்​தைக் கெடுப்​பவர்கள் மீது மதுரை மாவட்ட நிர்​வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்​தி​யும் பிப். 2-ம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்​தப்​படும்திருப்​பரங்​குன்றம் மற்றும் சுற்று​வட்​டாரப் பகுதி​யில் வசிக்​கும் மக்களிட​மும், வணிகர்​களிட​மும், கோயிலுக்கு வரும் பக்தர்
​களிட​மும் பெறப்​பட்ட கையெழுத்து​கள், பின்னர் அரசிடம் ஒப்​படைக்​கப்​படும். இவ்​வாறு அறிக்கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE