மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 410 கனஅடியாக சரிவு

By KU BUREAU

மேட்​டூர்: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 410 கன அடியாக குறைந்​துள்ளது.

காவிரி நீர்ப்​பிடிப்புப் பகுதி​களில் பெய்​யும் மழையைப் பொறுத்து மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரித்​தும், குறைந்​தும் வருகிறது. இந்நிலை​யில், மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 533 கனஅடியாக இருந்த நீர்​வரத்து நேற்று 410 கனஅடியாக குறைந்​தது. அணையி​லிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்​கப்​பட்டு வருகிறது. அணை நீர்​மட்டம் 110.64 அடியி​லிருந்து 110.62 அடியாக​வும், நீர் இருப்பு 79.32 டிஎம்​சியி​லிருந்து 79.29 டிஎம்​சி​யாக​வும் குறைந்​துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE