துணை ஜனாதிபதி வருகை: சென்னையில் நாளை ட்ரோன்களை பறக்கவிட தடை!

By KU BUREAU

சென்னை: இந்திய துணை ஜனாதிபதி வருகை காரணமாக சென்னை விமான நிலையம் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழிதடங்கள் “சிவப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டு நாளை (ஜனவரி 31) ட்ரோன்கள் பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய துணை ஜனாதிபதி ஜனவரி 31ம் தேதி அன்று சென்னைக்கு வருகை தந்து, அதே நாளில் முட்டுக்காடு மற்றும் மகாபலிபுரத்தில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்கிறார்.

2023ம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் ட்ரோன்கள் ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோலைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்க விட 2024ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி முதல் 2025ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

ஆகையால், சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட , சென்னை விமான நிலையம் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழி தடங்கள் "சிவப்பு மண்டலமாக" அறிவிக்கப்பட்டு (அரசாங்க ஏற்பாடுகளைத் தவிர) ஜனவரி 31ம் தேதி அன்று அந்த பகுதிகளில் மற்றும் வழித் தடங்களில், ரிமோட்லி பைலட் ஏர்கிராஃப்ட் சிஸ்டம்ஸ் (RPAS) ட்ரோன் ஆளில்லா விமானம், பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளது” என்று காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE