ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆதரவு; தமிழகத்தில் 20 இடங்களில் என்ஐஏ சோதனை: ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!

By KU BUREAU

சென்னை: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பவர்களை கண்டறியும் நோக்கத்தில் தமிழகத்தில் சென்னை மற்றும் சீர்காழியில் சுமார் 20 இடங்களில் என்ஐஏ அமைப்பு இன்று சோதனை நடத்தி வருகிறது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பது மற்றும் ஆட்களை சேர்ப்பது ஆகியவற்றில் ஈடுபடும் சந்தேக நபர்களை கண்டறியும் நோக்கத்தில் இன்று தமிழ்நாட்டில் சென்னை மற்றும் சீர்காழியில் சுமார் 20 இடங்களில் என்ஐஏ அமைப்பு சோதனைகளை நடத்தி வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் மீது கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சந்தேக நபர்கள் தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் பகுதியில் இன்று அதிகாலை முதல் 15 வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னனு சாதனங்களையும் கைப்பற்றியுள்ளனர். அதேபோல சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்த திருமுல்லைவாசலை சேர்ந்த அல்பாசிக் என்பவரையும் என்ஐஏ கைது செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஆதாரங்களை கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில், ஐஎஸ்ஐஎஸ்-ஆல் ஈர்க்கப்பட்ட மூன்று குற்றவாளிகளை என்ஐஏ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE