பாரம்பரிய உடற்பயிற்சி விழிப்புணர்வு - 24 மணி நேரம் 12,128 முறை கர்லாக் கட்டையை சுற்றி இளைஞர் சாதனை!

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பாரம்பரிய உடற்பயிற்சியை வலியுறுத்தி 24 மணி நேரத்தில் 12,128 முறை கா்லாக்கட்டையை சுற்றி இளைஞர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

புதுவை முதலியார்பேட்டை நைனார் மண்டபத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் புஷ் (வயது 29). இவர் வரி ஆலோசகராக உள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக கர்லாக் கட்டையை சுற்றும் பயிற்சியை செய்து வருகிறார். மேலும் கடந்த 4 ஆண்டுகளாக மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். இந்த நிலையில் பாரம்பரிய கர்லாக் கட்டை உடற்பயிற்சி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்த விரும்பினார். இதற்காக இவர் 24 மணி நேரம் கர்லாக் கட்டை சுற்றும் சாதனையில் ஈடுபட்டார்.

காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இந்த சாதனை நிகழ்வு நடந்தது. இதில 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 128 முறை கர்லாக் கட்டையை ஜார்ஜ் புஷ் சுற்றினார். இதனை டேலண்ட்னா வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE