சென்னை: ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்வை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் புறக்கணிப்பதாக தெரிகிறது.
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த ஆண்டும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் புறக்கணிக்கிறார். விஜய் தரப்பில் இருந்து நேற்று வரை தகவல் இல்லை.
இந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விழாவில் பங்கேற்க மதுரை செல்கிறார். அவருடன் அமைச்சர்களும் செல்வதால், தேநீர் விருந்தில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.
» “13 பேருக்கு பத்ம விருதுகள்... தமிழகத்துக்குப் பெருமை!” - ஜி.கே.வாசன் மகிழ்ச்சி
» “நடிகர் அஜித் உள்பட தமிழகத்தின் 13 பேர் பத்ம விருதுகள் வென்றது மகிழ்ச்சி” - அன்புமணி வாழ்த்து