“நடிகர் அஜித் உள்பட தமிழகத்தின் 13 பேர் பத்ம விருதுகள் வென்றது மகிழ்ச்சி” - அன்புமணி வாழ்த்து

By KU BUREAU

சென்னை: கிரிக்கெட் வீரர் அஷ்வின், நடிகர் அஜித் உள்பட தமிழகத்தின் 13 பேர் பத்ம விருதுகள் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள பதிவில்: "2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேகர் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், மக்களவையின் மறைந்த தலைவர் மனோகர் ஜோஷி உள்ளிட்ட 19 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், கிரிக்கெட் வீரர் அஷ்வின் உள்ளிட்ட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், திரைப்பட நடிகர் அஜித், நடனக் கலைஞரும், நடிகையுமான ஷோபனா சந்திரசேகர் ஆகியோர் பத்ம பூஷன் விருது வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றனர். கிரிக்கெட் வீரர் அஷ்வின், சமையல் கலை வல்லுனர் தாமோதரன், தினமலர் குழுமத்தைச் சேர்ந்த லட்சுமிபதி, பாரதி ஆய்வாளர் சீனி.

விசுவநாதன், ஹட்சன் குழுமத் தலைவர் சந்திரமோகன், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், எம்.டி.ஸ்ரீனிவாஸ், புரசை கண்ணப்ப சம்பந்தன் , ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, குருவாயூர் துரை ஆகியோருக்கும் புதுவையைச் சேர்ந்த தவில் வித்வான் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பத்ம விருது பெற்ற அனைவரும் தங்களின் துறைகளில் மேலும் மேலும் சாதனை படைக்கவும், இன்னும் உயரிய விருதுகளை வெல்லவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE