ஈரோடு கிழக்கில் சீமானுக்கு எதிர்ப்பு - தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் பரபரப்பு!

By KU BUREAU

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமானை கண்டித்து இன்று காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பை மீறி சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தரப்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2வது நாளாக பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த சூழலில், இன்று மறைந்த முன்னாள் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், பெரியார் வீடு அருகே பரப்புரையில் ஈடுபட்ட சீமானை கண்டித்து காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக, காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பை மீறி சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கோஷம் எழுப்பியவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் வீதிகளில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இருப்பினும் அதன்பின்னர் சீமான் தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபகாலமாக பெரியாருக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வருகிறார். எனவே அவருக்கு எதிராக இந்த எதிர்ப்பினை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE