விழுப்புரம்: பெரியார் குறித்து நாம் பேசினோம் என்றால், நமது பெயர் தொலைக்காட்சிகளில் வரும் என்று நினைத்து பேசுகிறார் சீமான். இது ஒரு பிரச்சார யுக்தி என தமிழக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, "ஆளே இல்லாத நபர்கள் எல்லாம் பேசுவதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் மனசாட்சியோடு சிந்தித்தாலே (சீமான்) தெரியும். சிந்திக்காமல் எதையோ பேசிக்கொண்டு இருக்கிறார். பிரபாகரனுடன் எடுத்துக்கொண்டதாக டூப்ளிகேட் போட்டவை வைத்து வெளியிட்டவர் அவர்.
அவர் என்ன நினைக்கிறார் என்றால், இந்த மாதிரி பெரியார் குறித்து நாம் பேசினோம் என்றால், நம்மளுடைய பெயர் தொலைக் காட்சிகளில் வரும் என்று நினைத்து பேசுகிறார். இது ஒரு பிரச்சார யுக்தி இது தமிழர்களின் ஆட்சி, தமிழர்களுக்கு நன்மை செய்யும் ஆட்சி. யாரோ சொல்வதற் கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை" என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.