சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகிகள் குழுவை பாஜக சார்பில் டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்திக்க செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை அந்த பகுதி மக்களுக்கு மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளிவரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், “டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகிகள் குழுவை பாஜக சார்பில் டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்திக்க செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குழு நாளை மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்து பேசுகிறது. நாளை அந்த பகுதி மக்களுக்கு மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளிவரும். டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தில் பிரச்சினை என்று தெரிந்த பின்னர் மத்திய அரசு அதற்கு தீர்வு காணவே முயற்சித்து வருகிறது” என தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கக்கூடாது என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் இந்த திட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளன.