சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையம் வரும் மே மாதம் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கம் பகுதியில், சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனையடுத்து வண்டலூர்- ஊரப்பாக்கம் புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில், 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களுக்காக தாமதமானது.
» பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 25ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்: அமைச்சர் அறிவிப்பு
» சென்னை: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.1.48 லட்சம் காசோலை திருட்டு
இந்த சூழலில் ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு மே மாதம் பணிகள் முடிவடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.