சிவகங்கை கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டில் 900 காளைகள் பங்கேற்பு - ஒருவர் உயிரிழப்பு

By KU BUREAU

சிவகங்கை: கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டில் 900-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடு இடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 165 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் கண்டிப்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து இன்று காலையில் கோயில் காளையை மஞ்சுவிரட்டு தொழுவுக்கு ஊர்வலமாக மேளதாளத்துடன் அழைத்து சென்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சிவகங்கை ஆட்சியர் ஆஷாஅஜித் மஞ்சுவிரட்டு உறுதிமொழி வாசித்தார். இதன்பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளையை அவிழ்த்துவிட்டதும் ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 137 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 45 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக கண்மாய் பொட்டல், வயல்வெளிப் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. மாடுகள் இடித்ததில் பார்வையாளர் குன்றக்குடி அருகே கொரட்டியைச் சேர்ந்த சண்முகம் (70) என்பர் உயிரிழந்தார். மேலும் மாடுகள் முட்டியதில் 165 பேர் காயமடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE