எங்கள் கூட்டணிக்கு வருவதே விஜய்க்கு நல்லது - செல்வப்பெருந்தகை அறிவுரை

By KU BUREAU

சென்னை: இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என்று விஜய் விரும்பினால், இண்டியா கூட்டணிக்கு வருவதே விஜய்க்கு நல்லது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இண்டியா கூட்டணிக்குதான் வர வேண்டும்.

விஜய் அவருடைய மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்றார். எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம், ஓரங்கட்டிவிடலாம். ஆனால் இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என்று விஜய் விரும்பினால், இண்டியா கூட்டணிக்கு வருவதே அவருக்கும் நல்லது அவருடைய கொள்கை, கோட்பாட்டுக்கும் நல்லது. இதை நான் யதார்த்தமாக நாட்டின் ஒரு குடிமகனாகச் சொல்கிறேன்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE