பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்குவதா, வேண்டாமா என்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கை விசாரிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 2 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கக்கோரி பாஜக வழக்கறிஞரான ஏ.மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் மனுதாரர் முறையீடு செய்தார்.
அதையேற்க மறுத்த நீதிபதிகள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு ரொக்கப்பணம் வழங்கினால் மகிழ்ச்சிதான். ஆனால் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பணம் வழங்குவதா, வேண்டாமா என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி கோரி்க்கையை ஏற்க மறுத்தனர்.
» திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் 7 பேர் கைது
» கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் மர்மப் பொருள்: எக்ஸ்பிரஸ் ரயில் சக்கரம், தண்டவாளம் சேதம்