புதுடெல்லி: பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டம், ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது. அதன் தொடர்ச்சியாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எட்டாவது பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
எனவே ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கவுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் இரண்டாவது வாரம் தொடங்கும் என தகவல்கள் தெரிவித்தன. தோராயமாக, மார்ச் 10 முதல் ஏப்ரல் 4 வரை இரண்டாம் கட்டம் நடைபெறும் என தெரிகிறது.