ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் 17 பேருக்கு இலங்கையில் உள்ள மன்னார் நீதிமன்றம் மூன்றாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து டிசம்பர் 22ல் கடலுக்குச் சென்ற சேகு பூண்டி ராஜ், அந்தோணி ஆரோன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகுகளை சிறைப்பிடித்து படகுகளிலிருந்து 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 17 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் காவல் நேற்றோடு நிறைவடைந்ததை தொடர்ந்து 17 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபிக் ஜனவரி 31 வரையிலும் மூன்றாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து 17 தமிழக மீனவர்களும் வவுனியா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.
» பாஜகவோடு கூட்டணி கிடையாது; குருமூர்த்தி வாங்கி கட்டிக்கொள்ள வேண்டாம் - ஜெயக்குமார் காட்டம்!
» நாம் தமிழர் கட்சியோடு போட்டியிடுவது காலத்தின் கொடுமை: திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் பேட்டி!