கரூரில் எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: 108வது பிறந்த நாளையொட்டி எம்ஜிஆர் சிலைகள் மற்றும் உருவப்படங்களுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி, இனிப்பு, வழங்கி, கட்சி கொடியேற்றி கொண்டாடினர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் லைட் ஹவுஸ் முனையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு இன்று (ஜன. 17ம் தேதி) மாவட்ட அவைத் தலைவர் திருவிக தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் அங்குள்ள ஜெயலலிதா, அண்ணா சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே கோவை சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப் படத்திற்கு திருவிக தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினர். கரூர் மாவட்ட அதிமுக அலுவலகம், வெங்கமேட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கு மாவட்ட அவைத் தலைவர் திருவிக தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மாவட்ட இணை செயலாளர் மல்லிகா, துணை செயலாளர் தங்கராஜ், கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தினேஷ், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் திருநாவுக்கரசு, அம்மா பேரவை செயலாளர் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேலாயுதம் பாளையம் வெள்ளக் கல்மேட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் மாலை அணிவித்தார்.

பசுபதி பாளையம் ரவுண்டானா, தாந்தோணிமலை, நெரூர், சோமூர், கோயம்பள்ளி, பள்ளபட்டி பேருந்து நிலையம் அருகில், அரவக்குறிச்சி ஏவிஎம் முனை, அண்ணா நகர், சின்னதாராபுரம், பள்ள பாளையம், தென்னிலை, க.பரமத்தி, வேலாயுதம் பாளையம் மலைவீதி ரவுண்டானா, தளவாபாளையம், கட்டளை, பழைய ஜெயங்கொண்டம், தரகம்பட்டி, வெள்ளியணை, உப்பிடமங்கலம், குளித்தலை ஆகிய இடங்களில் எம்ஜிஆர் உருவப் படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பஞ்சமா தேவி பேருந்து நிறுத்தம் அருகே கிளை செயலாளர் ராமசாமி, கிருஷ்ண ராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நகர செயலாளர் ராஜா கட்சி கொடியை ஏற்றி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE