சென்னை: கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார் என தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளுக்கு தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்
இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்’ என்று விஜய் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ம் நாள், ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.