உதகை மேல் தாவணெ கோயில் பிரச்சினை - தீர்வு காண கோரி ஆட்சியர் முகாம் அலுவலகம் முற்றுகை!

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகை அருகே மேல் தாவணெ மக்கள் கோயில் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே மேல் தாவணெ பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.நடப்பாண்டு ஹெத்தையம்மன் திருவிழா இன்று (ஜன.17) நடைபெற உள்ளது. திருவிழா கொண்டாடுவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு பிரிவினர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி நேற்று இரவு 9 மணியளவில் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ பகுதிக்கு உதகை கோட்டாட்சியர் சதீஷ்குமார் வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை 17ம் தேதி கிராமத்திற்கு வந்து இரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE