மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 7.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலையில் தொடங்கிய நிலையில், அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் வாடிவாசல் உறுதி மொழி ஏற்றனர். பின்னர் ஜல்லிக்கட்டினை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து பாலமேடு பொது மடத்து மகாலிங்க சுவாமி கோயில் காளை உள்பட 5 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் பிற காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு சுற்றிலும் 50 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்படுகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை போட்டியில் பங்கேற்றுள்ளன. கால்நடைத்துறையினர் பதிவு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து அனுப்புகின்றனர். தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சிங்கா மேற்பார்வையில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.