அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் வீர இளைஞர் உயிரிழப்பு

By KU BUREAU

மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் மருத்துவமனையில் கிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததார்.

மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 6.30 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிய தொடங்கிய நிலையில், இதுவரை 10 சுற்றுகள் முடிவடைந்துள்ளது. இதில், 20 மாடுபிடி வீரர்கள், 17 காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் 6 பேர் உட்பட மொத்தம் 43 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர். ஆக்ரோஷத்துடன் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில், 12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன் என்பவர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், சீறிப்பாய்ந்த காளை ஒன்று நவீனின் மார்பில் முட்டியது. இதில் பலத்த காயமடைந்த நவீனை, ரத்தக் காயங்களுடன் அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு நவீனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி மாடுபிடி வீரர் நவீன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE