பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை தவெக தலைவர் விஜய் சந்திக்க அனுமதிக்க கோரி மனு

By KU BUREAU

காஞ்சிபுரம்: பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து தொடர் போராட்​டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்​து பேச அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சி​யர், எஸ்பி அலுவல​கத்​தில் மனு வழங்​கப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் அடுத்த பரந்​தூரில் சென்னை​யின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்க 13 கிராமங்​களில் 5,100 ஏக்கர் நிலம் கையகப்​படுத்​தப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரி​வித்து 900 நாட்​களை கடந்​தும் தொடர்ந்து போராட்​டங்​களில் ஈடுபட்டு வருகின்​றனர்.

இந்நிலை​யில், தமிழக வெற்றிக் கழகத்​தின் முதல் மாநாட்​டில், பரந்​தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்​டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டதோடு வேறு எந்தப் போராட்​டத்​தை​யும் தவெக மேற்​கொள்ள​வில்லை என அப்பகுதி கிராம மக்கள் ஆதங்கம் தெரி​வித்​தனர்.

இது தொடர்​பாக, ‘இந்து தமிழ் திசை’ ஆன்லைன் பக்கத்​தில் கடந்த ஜன.2-ம் தேதி செய்தி வெளி​யானது. இந்நிலை​யில், பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து போராட்​டத்​தில் ஈடுபட்டு வரும் குழு​வினரை, வரும் ஜன.19 அல்லது 20-ம்தேதி​யில் ஏதேனும் ஒரு நாளில் தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்​துப் பேசஅனுமதி, போலீஸ் பாது​காப்​புக் கோரி தவெக மாநில பொருளாளர் வெங்​கட்​ராமன் தலைமை​யில் அக்கட்​சி​யின் நிர்​வாகி​கள், காஞ்​சிபுரம் ஆட்சி​யர், எஸ்பிஅலுவல​கத்​தில் நேற்று முன்​தினம் மனு வழங்​கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE