இன்று காலை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மீனவ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், மீனவ கிராமங்கள், தொடரந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது குறித்த கவலையில் ஆழ்ண்டுள்ளனர்.
கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 8 தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கைது செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் பயன்படுத்திய 2 விசை படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
சமீபத்தில் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவத்திற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.