மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பெண்களுக்கு எதிரான சட்டத் திருத்தம், அனைத்து குற்ற நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த வழிவகுக்கும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் கலந்துபேசி, உரிய முடிவை மேற்கொள்ளோம். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு வாக்குறுதிகள் அளிப்பதும், தேர்தலுக்குப் பின்னர் அவற்றை மறந்துவிடுவதும் திமுகவுக்கு வாடிக்கையாகிவிட்டது.
டங்ஸ்டன் சுரங்கம் குறித்து முதலில் குரல் கொடுத்தது அதிமுக உரிமை மீட்புக் குழுதான். எந்த வகையில் டங்ஸ்டன் சுரங்கத்தைக் கொண்டுவந்தாலும், அதைத் தடுத்து நிறுத்துவோம். மாணவி பாலியல் தொந்தரவு விவகாரத்தில், குற்றமிழைத்தவர்களை தெய்வம் நிச்சயம் தண்டிக்கும். அப்போது, அந்த சார் யார் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.