கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் ரூ.7.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் திருவிழாவுக்கு அடுத்த நாள் வரும் காணும் பொங்கல் விழாவில், மக்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபடுவது வழக்கம். இதற்காக பொங்கலை ஓட்டி வரும் வாரசந்தைகளில் ஆடுகள், நாட்டுக் கோழிகள் விற்பனை அதிகரிக்கும். இதற்காக கிராமபுறங்களில் பலர் ஆடுகள், கோழிகளை வளர்த்து சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
அதன்படி இன்று (10ம் தேதி) வெள்ளிக்கிழமை, கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி சந்தையில் கொண்டு வந்தனர். இதே போல், வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்து அதிக அதிக அளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆடுகளை வாங்கிச் செல்லவும், வேலூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். ஒரு ஆடு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது.
இது குறித்து ஆடு வியாபாரிகள் சிலர் கூறும்போது, வருகிற 16-ம் தேதி காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவு சமைப்பது வழக்கம். இதே போல் கிராமங்களில் இஷ்ட தெய்வங்களுக்கு ஆடுகளை வெட்டி, பங்கிட்டு பிரித்து கொள்வார்கள்.
» நடிகை பாலியல் புகார் வழக்கு: இன்று டிரம்பிற்கு தண்டனை அறிவிப்பு
» பொங்கல் பண்டிகையையொட்டி ஊத்தங்கரை மாட்டு சந்தையில் ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்
பண்டிகை காலங்கள் இல்லாத நாட்களில் வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையான நிலையில், இன்று ரூ.11 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் விற்பனையானது. இன்று ஒரு நாள் மட்டும் 7 ஆயிரம் ஆடுகள் சுமார் ரூ.7.50 கோடிக்கு மேல் விற்பனையானது. இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாளை மறு தினம் (12-ம்தேதி) போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றனர்.