வைகுண்ட ஏகாதசி: திருச்சியில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

By KU BUREAU

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு இன்று ஜனவரி 10ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாலை முதலே ஸ்ரீரங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், உள்ளூர் திருவிழாவில் கலந்து கொள்ள வசதியாகவும் இன்று ஜனவரி 10ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், ரத்தின அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை ஆகிய சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, சந்தன மண்டபம், ராஜ மகேந்திரன் திருச்சுற்று, நாழிக்கோட்டான் வாயில், தங்கக் கொடிமரம் வழியாக, பிரதட்சணமாக இரண்டாம் பிரகாரமான குலசேகரன் திருச்சுற்று வழியாக விரஜா நதி மண்டபத்தை வந்தடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக நம்பெருமாள் வெளியே வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து ரெங்கநாதரை தரிசித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE