கம்யூனிஸ்ட்களை குற்றம்சாட்டலாமா? - ஆ.ராசாவுக்கு முத்தரசன் கடும் கண்டனம்

By KU BUREAU

சென்னை: `இடஒதுக்​கீடு செய்​யப்​பட்ட தொகுதி தேடி, தேர்வு செய்​யும் நிலை​யில் இருக்​கும் பகுத்​தறிவாளர்கள் கம்யூனிஸ்ட்கள் மீது குற்​ றம்​சாட்​டலா​மா?’ என ஆ.ராசா​வின் பேச்​சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்​தரசன் கண்டனம் தெரி​வித்​துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்கை: சென்னை, பச்சையப்பன் கல்லூரி​யில் நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் பங்கேற்று பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா “கம்​யூனிஸ்ட்கள் சுயநல​வா​தி​களாக மாறி​விட்ட காரணத்​தால் கொள்கை தோற்றுப்​போய் விட்​டது” என்ற அரிய கண்டு​பிடிப்பை வெளி​யிட்​டுள்​ளார்.

“கம்​யூனிசம் பிறந்த இடத்​திலேயே செத்து​விட்​டது”, “முதலா​ளித்து​வத்​துக்கு மாற்று இல்லை” என்று தத்துவ எதிரிகள் கொக்​கரித்​துக் கொண்​டிருந்த வேளை​யில், முன்​னாள் முதல்வர் கருணாநிதி, “சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடு​களி​லும் கம்யூனிஸ்ட்​களுக்கு ஏற்பட்டது தோல்வி அல்ல; அது தற்காலிக பின்னடைவு மட்டுமே” என்று கூறியதை ஆ.ராசா தெரிந்து வைத்​திருக்க வேண்​டும்.

உள்ளாட்சி அமைப்பு​களில் இடஒதுக்​கீடு இல்லாத காலத்​தில் பட்டியலின சமூகத்​தில் இருந்து தலைவர்களை உருவாக்கி, நாடறிய உயர்த்தி பிடித்த கம்யூனிஸ்ட்கள் மீது, இடஒதுக்​கீடு செய்​யப்​பட்ட தொகுதி தேடி, தேர்வு செய்​யும் நிலை​யில் இருக்​கும் பகுத்​தறிவாளர்கள் குற்​றம்​சாட்டுவது பொறுப்​பற்ற செய​லாகும். ஆ.ராசா, இப்படி பொறுப்​பற்ற ​முறை​யில் பேசி வருவதை உடனடியாக நிறுத்​திக் ​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE