அதற்கு ஆளுநர் திமுகவிலேயே இணைந்து விடலாமே? - சீமான் பரபரப்பு பேட்டி

By KU BUREAU

வடலூர்: இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்று விட்டார். நீங்கள் எழுதி கொடுத்ததை படிப்பதற்கு அவர் திமுகவிலேயே சேர்ந்துவிடலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

வடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், “ ஆளுநரை எதிர்த்து திமுக போராடுவதே மற்ற போராட்டங்களையும் பிரச்சினைகளையும் திசை திருப்புவதற்கு தான். உங்கள் உரையை நீங்களே எழுதிக் கொள்வீர்களா? நீங்கள் எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா?. இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்று விட்டார். நீங்கள் எழுதி கொடுத்ததை படிப்பதற்கு அவர் திமுகவிலேயே சேர்ந்துவிடலாம்.

பொங்கல் பரிசு என்பது முதலில் ரூ.5000 ஆகவும், பிறகு ரூ.2500 ஆகவும், பிறகு 1000 ஆகவும் இருந்தது. தற்பொழுது ரூ.103 க்கு வந்துள்ளது. அது ரூ.3 க்கு வரும் முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

மற்றவர்களின் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஆளுநரை எதிர்த்து நினைத்த இடத்தில் போராட்டம் நடத்துகிறீர்கள். ஆளுநர் செய்த செயல் போராடும் அளவிற்கு குற்றம் என்றால், மாணவி பாதிக்கப்பட்டதற்கு போராட வேண்டிய அவசியம் இல்லையா?. ஏன் அதை அனுமதி மறுக்கிறீர்கள். வடலூர் வள்ளலார் பெருவெளியில் மக்கள் நின்று தரிசனம் செய்யக்கூடிய இடத்தில் ஆராய்ச்சி மையம் கட்டுவது ஏற்புடையது அல்ல வள்ளலாருக்கு நீங்கள் பண்பாட்டு மையம் கட்டுவதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை ஆனால் அதை வேறு இடத்தில் செய்ய வேண்டும். இந்த அரசு எப்பொழுதுமே வேண்டும் என்பதை செய்வதில்லை எதை வேண்டாம் என்று சொல்கிறோமோ அதைத்தான் செய்கிறது” என்று கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE