மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை: மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன் - நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

சென்னை: கல்​லூரி மாணவர்​களுக்கு போதை பொருள் விற்பனை செய்தாக பதியப்​பட்ட வழக்கில் கைதான நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்​ளக்​குக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டுள்​ளது. முகப்​பேர் மேற்கு பகுதி​யில் தனியார் கல்லூரி மாணவர்​களுக்கு செல்​போன் செயலி மூலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்​ததாக 5 கல்லூரி மாணவர்களை ஜெ.ஜெ.நகர் போலீ​ஸார் கைது செய்​தனர்.

போலீ​ஸாரின் விசா​ரணை​யில் போதைப் பொருள் கடத்​தலில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்​ளக்​குக்கு தொடர்பு இருப்பது தெரிய​வந்​த​தால் அவரை போலீ​ஸார் கடந்த டிச.4-ம் தேதி கைது செய்​தனர்.

இந்த வழக்​கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அலிகான் துக்ளக் சென்னை உயர்​நீதி மன்றத்​தில் மனுத் தாக்கல் செய்திருந்​தார். கையெழுத்திட வேண்டும் இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நடந்​தது. அப்போது, அலிகான் துக்​ளக்​கிட​மிருந்து எந்த போதைப் பொருளும் பறிமுதல் செய்​யப்​பட​வில்லை.

கைதான மற்ற நபர்கள் அளித்த வாக்​குமூலத்​தின் அடிப்​படை​யிலேயே அவர் கைது செய்​யப்​பட்​டதாக காவல் துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, குற்​றம்​சாட்​டப்​பட்ட அலிகான் துக்ளக் மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை ஜெ.ஜெ.நகர் காவல் நிலை​யத்​தில் தினமும் ​காலை​யில் ஆஜராகி கையெழுத்திட வேண்​டும், என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE