சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 17ம் தேதி தொடங்குகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் சமீபத்தில் காலமானார். அதனால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2021ல் இத்தொகுதி எம் எல் ஏவாக தேர்வான திருமகன் ஈவேரா 2023ம் ஆண்டு காலமானதால், அவரின் தந்தை இளங்கோவன் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருந்தார். இந்த சூழலில் இப்போது மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சி மீண்டும் களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
» டெல்லிக்கு பிப்ரவரி 5ல் ஒரே கட்டமாக தேர்தல் - வெற்றி பெறப்போவது யார்?
» மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: இபிஎஸ் கண்டனம்