விருதுநகர்: தமிழக ஆளுநரை கண்டித்து விருதுநகரில் திமுகவினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நகரச் செயலாளர் தனபாலன் தலைமை வகித்தார். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக ஆளுநரை கண்டித்தும், அவர் பதவி விலகக் கோரியும், பாஜக மற்றும் அதிமுகவை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.