சட்டப்பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு - அண்ணா பல்கலை. விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!

By KU BUREAU

சென்னை: அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப்பேரவையில் பாஜகவினரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “மாணவிக்கு நடந்த பாலியல் கொடூரத்தை கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் பாஜகவினர் வெளிநடப்பு செய்துள்ளோம். அண்ணா பல்கலை.யில் இரவு நேரத்தில் இந்த குற்றம் நடந்துள்ளது. அந்த குற்றவாளி ஆளுங்கட்சியை சேர்ந்தவர், அந்த குற்றவாளி மீது ஏற்கனவே 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கக்கூடிய சூழலில் அவர் மீது நடவடிக்கை இன்னும் எடுக்கவில்லை.

அண்ணா பல்கலைக் கழகம் விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா? இதை திட்டமிட்டு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமையாக கருதப் படுகிறது. உலகம் முழுவதும் கேட்கக் கூடிய ஒரே கேள்வி. யார் அந்த சார்? என்ற கேள்வி. தமிழ் தாய் வாழ்த்து முடிந்த உடனே தேசிய கீதம் படிக்க வேண்டும். தேசிய கீதம் படிப்பதற்கு முன்பே சட்ட விதிகளை பின்பற்றாமல் ஆளுநரை முற்றுகையிட்டு உரையை படிக்க விடாமல் உடனே அவர் கிளம்பிவிட்டார்” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE