சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு... முதல்வர் அறிவிப்பு!

By KU BUREAU

சென்னையில் இன்று காலை சிந்துவெளி நூற்றாண்டு கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இது குறித்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “சிந்துவெளி நாகரிகம் ஆரியத்துக்கு முற்பட்டது என்று ஜான் மார்ஷல் கூறினார். ஜான் மார்ஷலுக்கு சிலை அமைக்கும் பெருமை திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ளது. 1948ம் ஆண்டிலேயே சிந்துவெளி அடையாளங்களை வெளிகொண்டு வந்தவர் அண்ணா. செம்மொழி மாநாட்டில் சிந்துவெளி நாகரிகத்தை அடையாளப் படுத்தியவர் கருணாநிதி என தெரிவித்தார்.

சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும். கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருது வழங்கப்படும். தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE