சென்னை: காட்பாடியில் தனது வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
வேலூரில் தமிழக அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சரின் வீடு, அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம் உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "இந்த சோதனை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவு தான் எனக்கும் தெரியும். இந்த சோதனைக்கு யார் வந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. யாரும் வீட்டிலும் இல்லை. இரண்டு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
அவர்களுக்கு சோதனை செய்ய வந்திருப்பவர்கள் எந்த துறையைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் கூட தெரியாது. எனவே பணியாளர்களுக்கு சரியாக எதுவும் சொல்லத் தெரியவில்லை. காட்பாடி சென்ற பிறகு தான் சோதனை குறித்த விவரம் தெரியவரும்" என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
» மதுரையில் தடையை மீறி பேரணி: நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது
» பொங்கல் பரிசுத் தொகுப்பு: வீடு வீடாக டோக்கன் விநியோகம் துவங்கியது!