தமிழகத்தின் முதல் போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்த கால் நடும் விழா

By KU BUREAU

மதுரை: தமிழகத்​தின் முதல் ஜல்லிக்​கட்டுப் போட்​டியான அவனி​யாபுரம் ஜல்லிக்​கட்டுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் பி.மூர்த்தி முகூர்த்​தக்​கால் நட்டு நேற்று தொடங்கி​வைத்​தார்.

மதுரை மாவட்​டத்​தில் அவனி​யாபுரம், பாலமேடு மற்றும் அலங்​காநல்​லூரில் தமிழக அரசு சார்​பில் ஆண்டு​தோறும் ஜல்லிக்​கட்டுப் போட்​டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்​டிகளில் தமிழகம் முழு​வதும் இருந்து சிறந்த காளைகள் பங்கேற்​கின்றன. மேலும், போட்​டிகளைக் காண உள்நாடு மட்டுமின்றி, வெளி​நாடு​களில் இருந்​தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்​துடன் கலந்து கொள்​வ​தால், இது உலகப் புகழ்​பெற்​றதாக விளங்​கு​கிறது. ஜன. 14-ல் ஜல்லிக்கட்டு
பொங்கல் பண்டிகை நாளில், தமிழகத்​தின் முதல் ஜல்லிக்​கட்டுப் போட்​டியாக அவனி​யாபுரம் ஜல்லிக்​கட்டு நடைபெறும். இந்த ஆண்டு இந்தப் போட்டி ஜன.14-ம் தேதி நடைபெறுகிறது.

இந்தப் போட்​டிக்கான வாடிவாசல், பார்​வை​யாளர் மாடம், மாடுகள் சேகரிக்​கும் இடம் அமைப்​ப​தற்கான முகூர்த்தக் கால் நடும் விழா நேற்று நடைபெற்​றது. மேயர் இந்திராணி தலைமை வகித்​தார். ஆட்சியர் சங்கீதா, மாநக​ராட்சி ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்​தனர். அமைச்சர் பி.மூர்த்தி முகூர்த்​தக்​கால் நட்டு, ஜல்லிக்​கட்டு விழா பணிகளை தொடங்கி வைத்​தார்.

நிகழ்ச்​சி​யில், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால், சட்டப்​பேரவை உறுப்​பினர் ​மு.பூமிநாதன், துணை மேயர் நாக​ராஜன் மற்றும் பலர் கலந்​து ​கொண்​டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE