பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும்: ஜனவரி 6ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்!

By KU BUREAU

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 6ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடந்து நடக்கும் பாலியல் வன்கொடுயையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுத்தியும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 6ம் தேதி காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE