திமுகவின் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டு வருகிறது - தமிழிசை கோபம்

By KU BUREAU

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி போராட பெண் தலைவர்களுக்கு கூட அனுமதி மறுப்பது கண்டனத்திற்குரியது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அண்ணா பல்கலைக் கழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி போராட பெண் தலைவர்களுக்கு கூட அனுமதி மறுப்பது தொடர்ந்து நடைபெறுவது கண்டனத்திற்குரியது...

இன்று தனது கண்டனத்தை தெரிவிக்க வந்த பாமகவைச் சார்ந்த சகோதரி சௌமியா அன்புமணி போராட்டக் குரல் எழுப்புவதற்கு முன்பே கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்....

தொடர் கைதுகள் உண்மையை மூடி மறைத்து விட முடியாது... போராட்டங்களை அடக்கு முறையால் முடிவுக்கும் கொண்டு வர முடியாது. திமுகவின் திராவிட மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டு வருகிறது. ஆம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத அரசு முடிவுக்கு வரும் முடிவுரை எழுதப்பட்டு வருகிறது....' என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE