அரவணைப்பு திட்டம்: மேலும் 1188 பெண் குழந்தைகள் புதிதாக சேர்க்க புதுவை அரசு ஒப்புதல்

By KU BUREAU

புதுச்சேரி: பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கும் முதல்வரின் அரவணைப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 3423 பெண் குழந்தைகளின் பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1188 பெண் குழந்தைகளின் பெயரில் வைப்பு தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50,000 டெபாசிட் செய்த திட்டத்திற்கான அரசாணை கடந்த 2023 ஜூலை வெளியிடப்பட்டது. முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் திட்டம் அறிமுகமானது. திட்டத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தில் பயனடையும் குழந்தையின் பெற்றோர் புதுச்சேரியில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும்.

2023ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன் அடையலாம். குழந்தையின் பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய் வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் டெபாசிட் செய்யப்படும். 21 ஆண்டுகள் கழித்து பணம் வழங்கப்படும். அதையடுத்து கடந்த 2023ல் இத்திட்டம் புதுச்சேரியில் அமலுக்கு வந்தது.

இத்திட்டம் செயல்பாடு தொடர்பாக புதுச்சேரி அரசு தரப்பில் கூறுகையில், "பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கும் முதல்வரின் அரவணைப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 3423 பெண் குழந்தைகளின் பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1188 பெண் குழந்தைகளின் பெயரில் வைப்பு தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது" என்று அரசு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE