புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு

By KU BUREAU

திருவள்ளூர்/செங்கை/ காஞ்சி: புத்​தாண்டை முன்னிட்டு, திரு​வள்​ளூர், செங்கை, காஞ்சி மாவட்​டங்​களில் உள்ள தேவால​யங்​கள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்​களில் ஆயிரக்​கணக்​கில் பக்தர்கள் குவிந்து, சுவாமி தரிசனம் செய்​தனர். உலகம் முழு​வதும் நேற்று ஆங்கில புத்​தாண்டு கொண்​டாடப்​பட்​டது. திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில், தேவால​யங்​கள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடி​யிருப்பு பகுதிகள் உள்ளிட்​ட​வற்றில் பொது​மக்கள் புத்​தாண்டு கொண்​டாட்​டத்​தில் ஈடுபட்​டனர்.

திரு​வள்​ளூர் புனித பிரான்​சிஸ் சவேரி​யார் தேவால​யம், ஆவடி புனித அந்தோணி​யார் தேவால​யம், திருத்தணி புனித தணிக்கை மாதா தேவால​யம், பழவேற்​காடு புனித மகிமை மாதா தேவால​யம், கும்​மிடிப்​பூண்டி செயின்ட் பால் தேவாலயம் உள்ளிட்ட மாவட்​டத்​தின் பல பகுதி​களில் உள்ள தேவால​யங்​களில் புத்​தாண்டு கொண்​டாடப்​பட்​டது. இதில், பெரும்​பாலான தேவால​யங்​களில் நேற்று முன் தினம் இரவு மற்றும் நேற்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில், ஆயிரக்​கணக்​கானோர் பங்கேற்று, இறை வழிபாடு​களில் ஈடுபட்​டனர்.

திரு​வேற்​காடு தேவி கருமாரி​யம்மன் கோயில், வேதபுரீஸ்​வரர் கோயில், திரு​வள்​ளூர் வீரராகவ பெரு​மாள் கோயில், பெரியபாளையம் பவானி​யம்மன் கோயில், திரு​முல்​லை​வா​யில் பச்சை​யம்மன் கோயில், சிறு​வாபுரி பாலசுப்​பிரமணிய சுவாமி கோயில், பூந்​தமல்லி திருக்​கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெரு​மாள் கோயில் உள்ளிட்ட மாவட்​டத்​தில் பிரசித்திப் பெற்ற கோயில்​களில், புத்​தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல், இரவு வரை சிறப்பு பூஜைகள் நடந்தன.

இந்த கோயில்​களில் ஆயிரக்​கணக்கான பக்தர்கள் வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்து, சுவாமி தரிசனம் செய்​தனர். மேலும், திருத்தணி சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் நேற்று முன் தினம் தொடங்கிய இரு நாட்கள் திருப்புகழ் திருப்​படித் திரு​விழா மற்றும் பத்​தாண்டை முன்னிட்டு, ஆயிரக்​கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்​தனர். இதில், நேற்று முன் தினம் நள்ளிர​வில், திரைப்பட நடிகர் யோகிபாபு உள்ளிட்​டோர் முருகனை வணங்​கினர்.

காஞ்​சிபுரத்​தில் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெரு​மாள் கோயில், ஏகாம்​பரநாதர் கோயில் உட்பட பல்வேறு கோயில்​களில் பக்தர்கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர். பக்தர்​களின் வசதிக்காக ஆங்காங்கே நிழற்​குடைகளும் பொது தரிசனம், ரூ.50, ரூ.100 சிறப்பு கட்டணம் தரிசன​மும் செய்ய ஏற்பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. கோயிலுக்கு வரும் பக்தர்​களுக்கு கோயில் நிர்​வாகம் சார்​பில் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்​கப்​பட்​டது.

செங்​கல்​பட்டு மாவட்​டம், தாம்​பரத்தை அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெரு​மாள் கோயி​லில் சுவாமிக்கு அதிகாலை​யில் சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் வரிசை​யில் நின்று சுவாமி தரிசனம் செய்​தனர். பிற்​பகலில் அன்ன​தானம் வழங்​கப்​பட்​டது.

மேலும், குன்​றத்​துார் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்​கப்​பட்​டது. பக்தர்​களின் கூட்டம் கட்டுக்​கடங்காத அளவில் இருந்​த​தால் குன்​றத்​துார் பேருந்து நிலை​யத்​தில் இருந்து கோயிலுக்கு செல்​லும் சாலை​யில் கடும் நெரிசல் ஏற்பட்​டது. மாங்​காடு காமாட்சி அம்மன் கோயி​லில், அதிகாலை​யில் நடை திறக்​கப்​பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.

மேற்கு தாம்​பரம் செல்வ விநாயகர், பம்மல் இரட்டை பிள்​ளை​யார், பொழிச்​சலுார் அகத்​தீஸ்​வரர், சானடோரியம் ஆஞ்சநேயர், பூந்​தமல்லி வரதராஜ பெரு​மாள் மற்றும் வைத்​தீஸ்​வரன், திரிசூலம் திரிசூலநாதர், பெருங்​களத்​துார் இரணி​யம்மன் உள்ளிட்ட கோயில்​களி​லும் சிறப்பு வழிபாடு நடந்​தது.

மேல்​மரு​வத்​தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கோயில், திரு​மலை​வை​யா​வூர் பெரு​மாள் கோயில், அச்சிறுப்​பாக்கம் ஆட்சீஸ்​வரர், திருக்​கழுகுன்றம் வேதகிரீஸ்​வரர் மலைக்​கோ​யில், திரு​விடந்தை நித்​தியக் கல்யாண பெரு​மாள் கோயில் உட்பட மாவட்​டத்​தின் பல்வேறு பகுதி​களில் கோயி​லிகளில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு மேற்​கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE