காரைக்குடி: உப்பு உள்ள பாப்கார்னுக்கு ஒருவரி, உப்பில்லாததற்கு வேறொரு வரி என விந்தையான ஜிஎஸ்டி இந்தியாவில் மட்டும்தான் உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பின்தங்கிய மக்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கலாம்
என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அந்தந்த மாநில சூழ்நிலை, முறையான கணக்கெடுப்புக்கு பின்னரே உள்ஒதுக்கீட்டை பெறலாம். ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சாசனத்துக்கு முரணானது.
அதை இண்டியா கூட்டணி தோற்கடிக்கும். அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்துக்கு, அங்கு துணைவேந்தர் இல்லாததும் ஒரு காரணம். அரசுதான் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும். ஆளுநர்கள் வரம்புமீறி செயல்படுவதால் சிக்கல் ஏற்படுகிறது. அண்ணாமலை தன்னை சாட்டையால் அடித்துக் கொண்
டதற்கு இங்கிலாந்தில் கற்றுக் கொண்ட பாடம்தான் காரணம்.
பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1,000 கொடுக்காதது தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்காது. 2026-ம் ஆண்டு திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.உப்பு போட்ட பாப்கார்னுக்கு ஒரு வரி; உப்பு போடாத பாப்கார்னுக்கு வேறு வரி என உலகத்திலேயே விந்தையான ஜிஎஸ்டி இந்தியாவில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் உள்ள ஜிஎஸ்டி சட்டமே தவறானது.
» மதுரையில் வேலை வாங்கித்தருவதாக இன்ஜினீயரிடம் ரூ.40 லட்சம் மோசடி: ஒருவர் கைது
» கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் 85 பேர் கைது
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழுக்காக நூலகம் கட்டிக் கொடுத்துள்ளோம். இது சிவகங்கை மாவட்டமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதை ஜன.21-ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்துவைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.