சென்னை: அனுமதியின்றி பொதுமக்களுக்கு தவெக கட்சியின் துண்டு பிரச்சாரம் விநியோகம் செய்ததற்காக சென்னை தி. நகரில் கைது செய்யப்பட்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை, அண்ணாபல்கலைக் கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாகவும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும் இன்று தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தார். மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தனக்கு சொல்ல முடியாத துயரத்தைக் கொடுத்ததாகவும் இன்று காலை தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்தக் கையெழுத்து அறிக்கையை சென்னை, அண்ணாநகரில் உள்ள தனியார் மாலின் முன்பு நின்று பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர் தவெக பெண் நிர்வாகிகள் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். சில மணி நேரங்களுக்கு பிறகு புஸ்ஸி ஆனந்த் உட்பட 300க்கும் மேற்பட்டோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.