உதகை: சிறப்பு ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: விடுமுறை காலத்தை முன்னிட்டு, உதகை முதல் கேத்தி இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.

நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், உதகையில் தற்போது புத்தாண்டு விடுமுறை தொடங்கியுள்ளதால் மலை ரயில் சிறப்பு சேவைகளை தெற்கு ரயில்வே அறிவித்தது.

அதன்படி, மேட்டுப்பாளையம்-உதகை, உதகை-குன்னூர் மற்றும் உதகை-கேத்தி இடையே விடுமுறை கால சிறப்பு ரயில் சேவை கடந்த 25ம் தேதி முதல் ஜனவரி மாதம் 2ம் தேதி வரை இயக்கப்படுகிறது. குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு உதகை வரையிலும், மாலை 4.45 மணிக்கு உதகையிலிருந்து குன்னூர் வரையும் என இரண்டு முறை சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

இதேபோல, மனமகிழ்வு பயணமாக உதகை - கேத்தி இடையே குறுகிய தொலைவு மலை ரயில் உதகை முதல் கேத்தி வரை காலை 9.45 மணிக்கும், 11.30 மணிக்கும், மாலை 3 மணிக்கும் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது. இந்த மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரயிலில் பயணித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE