புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கடிதம் 

By எஸ்.ஆனந்த விநாயகம்

சென்னை: புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் தமிழக முதல்வரை போக்குவரத்து ஓய்வூதியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.கதிரேசன் முதல்வருக்கு அனுப்பிய கடிதம்: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஆற்றொணா துயரும், அல்லலும், பொருளாதார நலிவு காரணமாக வறுமையின் வாட்டமும் குறித்து மீண்டும் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். அனைத்துக்கும் காரணமாக இருப்பது தொடர்ந்து மறுக்கப்படும் அகவிலைப்படி உயர்வு தான்.

எனவே, மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அதிகாரிகளை அழைத்து பேசி, தேர்தல் வாக்குறுதிப்படி அகவிலைப்படி உயர்வை புத்தாண்டு பரிசாக அறிவிக்க வேண்டும் என 95 ஆயிரம் ஓய்வூதியர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE