புதுவை: புத்தாண்டு முதல் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு!

By KU BUREAU

புதுச்சேரி மாநில அரசு ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு முதல் பெட்ரோ, டீசல் விலையை உயர்த்தியுள்ளது. புதுச்சேரி மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்தின் கீழ் பெட்ரோல், டீசலுக்கு திருத்தப்பட்ட வரி விகிதங்களை அறிவித்துள்ளது. இந்த வரி விகிதங்கள் வரும் புத்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதுச்சேரியில் பெட்ரோலுக்கான வாட் வரி 14.55 சதவீதத்திலிருந்து 16.98 சதவீதமாகவும், காரைக்கால் பகுதியில் 14.55 சதவீதத்திலிருந்து 16.99 சதவீதமாகவும், மாஹே பகுதியில் 13.32 சதவீதத்திலிருந்து 15.79 சதவீதமாகவும், ஏனாமில் 15.26 சதவீதத்திலிருந்து 17.69 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. டீசல் மீதான வாட் வரி புதுச்சேரியில் 8.65 சதவீதத்திலிருந்து 11.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. காரைக்காலில் 8.65 சதவீதத்திலிருந்து 11.23 சதவீதமாகவும், மாஹேவில் 6.91 சதவீதத்திலிருந்து 9.52 சதவீதமாகவும், ஏனாமில் 8.91 சதவீதத்திலிருந்து 11.48 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.26, காரைக்காலில் 94.03, மாஹேவில் ரூ. 91.92 மற்றும் ஏனாமில் ரூ.94.92 ஆக உள்ளது. டீசல் விலை புதுச்சேரியில் ரூ.84.48, காரைக்காலில் ரூ. 84.31, மாஹேவில் ரூ. 81.90 மற்றும் ஏனாமில் ரூ.84.75 இருந்து வருகிறது. தற்போது வாட் வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது. அதன்படி புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.26, காரைக்காலில் 96.03, மாஹேவில் 93.92, ஏனாமில் 96.92 ஆக உயர்த்தப்படுகிறது. இதேபோல் புதுச்சேரியில் டீசல் லிட்டருக்கு ரூ. 86.48, காரைக்காலில் ரூ.84. 31, மாஹேவில் ரூ. 81.90, ஏனாமில் ரூ. 84. 75 உயர்த்தப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE