வைகை விரைவு ரயில் பிப்.11 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும்

By KU BUREAU

சென்னை: இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் வைகை விரைவு ரயில், பிப்.11ம் தேதி வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலில் இருமுடி மற்றும் தைப்பூச விழா நடைபெற உள்ளது. இதில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். பக்தர்களி்ன் வசதிக்காக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 48 விரைவு ரயில்கள், தற்காலிகமாக 2 நிமிடம் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே கடந்த நவ.28ம் தேதி அறிவித்தது. தற்போது, இந்த ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்கின்றன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் வைகை விரைவு ரயில் (12635) பிப்.11-ம் தேதி வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும். அதாவது, மேல் மருவத்தூரில் பிற்பகல் 3.08 மணி முதல் 3.10 மணி வரை 2 நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE