மழை​யால் நீர்ப்​பிடிப்பு பகுதி​களில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பு: பூண்டி ஏரியி​லிருந்து மீண்​டும் உபரிநீர் திறப்பு

By KU BUREAU

திரு​வள்​ளூர்: திரு​வள்​ளூர் அருகே உள்ள பூண்டி ஏரி, சென்னைக்கு குடிநீர் வழங்​கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்​கு​கிறது. இந்த ஏரிக்கு வடகிழக்கு பருவ மழை காரணமாக நீர் பிடிப்பு பகுதி​களில் இருந்து மழைநீர் தொடர்ந்து வந்து கொண்​டிருக்​கிறது. மழைநீர் மிக அதிகள​வில் வந்த​தால், கடந்த 12-ம் தேதி முதல், 18-ம் தேதி வரை பூண்டி ஏரியி​லிருந்து உபரிநீர் திறக்​கப்​பட்​டது.

இந்நிலை​யில், நேற்று முன் தினம் இரவு திருத்​தணி, பள்ளிப்​பட்டு உள்ளிட்ட நீர்ப்​பிடிப்பு பகுதி​களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்​தது. ஆந்திர மாநிலம்- கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து நேற்று முன் தினம் இரவு 10 மணி முதல், நேற்று காலை 6 மணிவரை விநாடிக்கு 1,000 கனஅடி உபரிநீர் திறக்​கப்​பட்​டது. இதனால், நீர்ப்​பிடிப்பு பகுதி​களில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீர் அதிகரித்து வருகிறது. நீர்​வரத்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,290 கன அடியாக உள்ளது.

ஆகவே, 3,231 மில்​லியன் கன அடி கொள்​ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 3,121 மில்​லியன் கன அடியாக​வும், நீர் மட்ட உயரம், 34.92 அடியாக​வும் உள்ளது. எனவே, பூண்டி ஏரியின் பாது​காப்பு கருதி, முன்னெச்​சரிக்கை நடவடிக்கை​யாக, 16 மதகுகள் கொண்ட இந்த ஏரியி​லிருந்து மீண்​டும் உபரிநீரை நேற்று காலை 9 மணியள​வில் நீர்வள ஆதாரத் துறை​யினர் திறந்​தனர்.

இரு மதகு​களில் விநாடிக்கு ஆயிரம் கன அடி என திறக்​கப்​பட்​டுள்ள இந்த உபரிநீர், ஏரிக்கு வரும் நீர் வரத்​தின் அளவை பொறுத்து, படிப்படியாக அதிகரிக்​கப்​படும் அல்லது குறைக்​கப்​படும் என, நீர் வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரி​வித்​துள்ளனர்.

பூண்டி ஏரியி​லிருந்து கொசஸ்தலை ஆற்றினுள் திறக்​கப்​பட்​டுள்ள உபரிநீர், தாமரைப்​பாக்​கம், காரனோடை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 65 கி.மீ. பயணித்து, சென்னை- எண்ணூர் பகுதி​யில் வங்காள விரி​குடாவில் கலக்​கும். ஆகவே, பூண்டி ஏரியி​லிருந்து உபரிநீர் வெளி​யேறும் கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்களில் உள்ள நம்பாக்​கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்​பாக்​கம், ஒதப்பை, நெய்​வேலி, எறையூர், பீமன்​தோப்பு, கொரக்​கந்​தண்​டலம், சோமதேவன்​பட்டு, மெய்​யூர், வெள்​ளியூர், தாமரைப்​பாக்​கம், திருக்​கண்​டலம், ஆத்தூர், பண்டிக்​காவனூர், ஜெகநாத​புரம், புதுகுப்​பம், கன்னிப்​பாளை​யம், வன்னிப்​பாக்​கம், அசூவன்​பாளை​யம், மடியூர், சீமாவரம், வெள்​ளிவாயல்​சாவடி, நாப்​பாளை​யம், இடை​யான்​சாவடி, மணலி, சடை​யான்​குப்​பம், எண்​ணூர் பகு​தி​களில் ​தாழ்வான இடங்களில் வசிப்​பவர்​களுக்​கு வெள்​ள அபாய எச்​சரிக்​கை ​விடுக்​கப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE