முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு: புதுச்சேரி அரசு 7 நாள் துக்கம் அனுசரிப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: முன்னாள் பிரதமர் மறைவுக்கு புதுச்சேரி அரசு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் இறந்தார். முன்னாள் பிரதமர் மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க மத்திய அரசு அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து புதுவை அரசும் 7 நாள் துக்கம் அனுஷ்டிக்கிறது. எனவே வரும் ஜனவரி 1ம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை உட்பட அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் பட்டுள்ளது. அரசு விழாக்கள் ரத்து செய்யப்பட்டு, மறைந்த பிரதமர் மன்மோகன்சிங்குக்காக அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE