முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

By KU BUREAU

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மன்மோகன் சிங்கின் குடும்பத்தினரிடம் தனது ஆறுதலையும் தெரிவித்தார்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி.கனிமொழி ஆகியோரும் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். திமுக எம்.பி-க்கள் ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோரும் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

92 வயதான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயது முதிர்வு சார்ந்த பிரச்சினைகள் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். இதையடுத்து அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

காலை முதல் ஏராளமான தலைவர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதபோல், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மன்மோகன் சிங்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE